Saturday, 14 May 2016

மகளிர் தின வாழ்த்துக்கள்

வெளிச்சத்தின் விட்டில்கள்அல்ல பெண்கள் 
வீர நெருப்புக்களை ஈன்ரெடுத்த எரிமலைக் குழம்புகல் - வீர விடுதலைக்காய் உதிரத்தை உரமாக்கியவர்கள்!. சரித்திரத்தின் சான்றுகள் ! 

கயவர்களால் கருவரை கல்லரையானாலும் 
வீர மறவர்களை மடியில் தாங்கிய மாதாக்கள் 
போரிலே மறவன் பசியால் மடியாமல் இருக்க 
தன் முலைப் பாலை புகட்டி போருக்கு அனுப்பிய 
வீரத் திலகங்கள் ..! விடுதலை வெளிச்சங்கள் ..! 

சமுதாயத்தின் எச்சங்கள் அல்ல பெண்கள் 
உணர்ச்சியின் உச்சங்கள் - வீரத்தின் மிச்சங்கள்!. 
விடுதலை மண்ணிலே வித்திட்டவர்கள் ...! 
சமுதாயமே ...! சமுதாயமே ..! -இவர்களை 

விளம்பர பொருளாக்கி வீதியில் நசுக்கியது போதும் ..! - காமப் பொருளாக்கி கசக்கி முகர்ந்தது போதும் ..! - பெண் என்பவள் போதையும் அல்ல 
அவள் பேதையும் அல்ல - இந்த சமுதாய 
விடியலுக்கு வெளிச்சம் தரும் திரு விளக்கு ...!

நான் காணும் இவ்வுலகை நீ காண வேண்டும்

நான் விரும்பும் உலகை 
நீ காண வேண்டும் 
நீ காண வேண்டும் ! 

நாடும் நானிலமும் 
செழித்திட வேண்டும் 
செழித்திட வேண்டும் ! 

பாசமுடன் நேசமும் 
தழைத்திட வேண்டும் 
தழைத்திட வேண்டும் ! 

நாளும் பொழுதும் 
நீ நலனே பெறவேண்டும் 
நீ நலனே பெறவேண்டும் ! 

வாழ்த்துக்கள் தோமைகளே

அன்புடையீர்! 
நல்லவை நினைத்து 
நல்லொழுக்கம் பேணி 
நல்குரவு மதித்து 
நல்லுறவு காத்து 
நற்செயல் புரிந்து 
நற்செய்தி கேட்டு 
இல்லாருக்கு உதவி 
நல்லோர் மதிக்க, 
இல்லத்தில் இன்பமும் 
உள்ளமதில் மகிழ்வும் 
என்றும் செழித்து 
ஏற்றமுடன் வாழ, 
குறையற்ற வாழ்வு 
குன்றாது இருக்க, 
இறையருள் கூடிய 
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பெற்றோரின் பேரானந்தத்துடன் 
வரும் வினை நீங்கி 
பெரும் ,புகழும் வாங்கி 
பேருவகையுடன் வாழ்வைத்தொடங்கி 
அருமையோடும் ,பெருமையோடும் 
திரு நாள் போன்று 
உங்கள் பிறந்த நாள் விழாவாகி 
நீ வாழ வாழ்த்துகின்றேன் நல் மனதுடன்

பொங்கல் வாழ்த்துக்கள்

இயற்கையோடு நாம் 
இயைந்த திருநாள்... 
கால்நடைகளோடு நாம் 
உறவாடும் திருநாள்... 
கதிரவனும் கதிரும் நம்மில் 
கலந்த திருநாள்... 
சங்கம் தொட்டே நம்மை 
பின்தொடரும் திருநாள்... 
சமயம் சாரா கொண்டாடும் 
ஒரே திருநாள்... 
நம் தைத் திருநாள்... 

வாழ்த்துப்பூ மழை

எண்ணங்கள் யாவும் இனிமையாக 
==எப்போதும் மகிழ்ச்சி பூக்களாக 
வண்ணங்கள் ஒன்றே வாழ்க்கையாக 
==வசந்தத்தில் வீசும் தென்றலாக 
இன்னல்கள் ஓடும் மேகமாக 
==இன்பமே என்றும் நிலையானதாக 
புன்னகை பூக்கும் தோழமைகளே 
==பொழிகிறேன் எனது வாழ்த்துக்களை. 

எழுத்தில் மட்டுமல்ல என் இதயத்தில் வாழும் 
தோழமைகள் யாவருக்கும் இதயபூர்வமான 
கிறிஸ்மஸ் + புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பெற்றோர்கள் தினம்

முதுமைச் சுருக்கங்கள் 

என்ற அழகோடு 
வறுமை என்ற வாழ்க்கையோடு 
கடன் அடைத்த அன்றைய பெத்த கடன் . 

இன்று ..... 

மளிகைக் கடைக் 
கடனோடும், 

கல்வி கடைக் 
கடனோடும், 

வீதிமுனை வரை 
நீண்டிருக்கும் 
வட்டிக் கடைக் கடனோடும், 

அவமானத் துண்டால் 
முகம் மறைத்து 
வீட்டில் வாழும் பெற்றோர்களுக்கு 

கடன்பட காரணமாக இருந்த பெத்த கடன் 
கடன்பட்டு இருக்கும் பொது 
எந்த துண்டால் முகம் மறைப்பர்களோ! 

வாழ்த்துக்கள்

முடியும் இந்த இரவு 
உன் கவலைக்கு 
முடிவாய் இருக்கட்டும் 
மலரும் நாளைய காலை 
மகிழ்சிக்கு 
ஆரம்பமாய் இருக்கட்டும் 
புத்தாண்டு வாழ்த்துக்கள்

உசுருக்கு பிறந்த நாள்

தட்டாம் பூச்சி பறக்கும் 
தாமரை குளம் பூக்கும் 
உன்ன பாக்கும் போது -என் 
கண்ண பாக்கும் போது 

தட்டி தட்டி செஞ்ச பான இல்ல நானு - நீ 
கொட்டி கொட்டி வளத்த உன் கொழந்த தானே நானு 

வெட்டிகிட்டு போக நகமா நீயும் 
உசுரா தானே எனக்குள்ள இருப்ப

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

துன்பங்களை நீக்கி - நல் 
புத்துணர்ச்சி தந்தே 
மேன்மையை கொண்டது 
இனிய துன்முகியாம்.. 

வேம்முகம் கொண்ட காலத்திலே 
வேம்பம்பூ பாயாசமாம் - மஞ்சள் 
நீரெடுத்து ஆடுவோமே 
பிணியகன்றிட கொண்டாடுவோமே... 

நித்திரையின்றி கண்விழித்து 
முத்திரையிற்றி கொள்வதல்ல - பந்து 
மித்திரரோடு உடன்களித்தே 
சித்திரையை கொண்டாடுவோமே .. 

அனைவருக்கும் ஆனந்தமாக அமைய 
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...