Saturday, 14 May 2016

பெற்றோர்கள் தினம்

முதுமைச் சுருக்கங்கள் 

என்ற அழகோடு 
வறுமை என்ற வாழ்க்கையோடு 
கடன் அடைத்த அன்றைய பெத்த கடன் . 

இன்று ..... 

மளிகைக் கடைக் 
கடனோடும், 

கல்வி கடைக் 
கடனோடும், 

வீதிமுனை வரை 
நீண்டிருக்கும் 
வட்டிக் கடைக் கடனோடும், 

அவமானத் துண்டால் 
முகம் மறைத்து 
வீட்டில் வாழும் பெற்றோர்களுக்கு 

கடன்பட காரணமாக இருந்த பெத்த கடன் 
கடன்பட்டு இருக்கும் பொது 
எந்த துண்டால் முகம் மறைப்பர்களோ! 

No comments:

Post a Comment